உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் சித்திரை திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

தேனி கோயில்களில் சித்திரை திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

தேனி : தேனி பகுதியில் உள்ள கோயில்களில், சித்திரைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோயிலுக்கு, அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். அல்லிநகரத்தில் இருந்து, கோயில் வரை உள்ள 4 கி.மீ., தூர மலைப்பாதையும் பக்தர்கள் நெரிசலில் நிரம்பி வழிந்தது. வழியெங்கும் நீர் மோர் பந்தல்கள், இலவச பிரசாத ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நடந்து செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தேனி வீரகாளியம்மன் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாட்ஷி விநாயகர் கோயில், சந்தைப்பேட்டை காளியம்மன்கோயில், பங்களாமேடு சிவன்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்டிபட்டி வேலப்பர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வர் கோயில்களில், காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !