உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி : தமிழ்புத்தாண்டை பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் விமரிசையாக கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தும்; இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், காலை 5:30 மணிக்கு கலச பூஜையும், சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மா, பலா உள்ளிட்ட பல்வேறு கனிகளை கொண்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ராஜிவ் நகர் கணபதி, பூமாதேவி, கருப்பண்ணசாமி கோவிலில், சித்திரை தீர்த்த திருவிழா நேற்று நடந்தது. தொடர்ந்து, மாணவ, மாணவியர் சிவன், அனுமன் உள்ளிட்ட வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதி சந்தான விநாயகர் மற்றும் சுந்தர விநாயகர் கோவிலில், 16 வகையான அபிேஷகமும்; கனகாபிேஷகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !