முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா!
ADDED :4236 days ago
பாலமேடு : பாலமேடு அருகே மறவபட்டி கிராம கோயில் தெய்வமான மஞ்சமலை, முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. அம்மன் கரகம் ஜோடித்தல், அம்மனுக்கு நகை பூட்டி நகர் வலம் வருதல், வன பூஜை, வாணவேடிக்கை நடந்தது. பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் உட்பட நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி செய்திருந்தது.