கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்!
கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, இன்று (16.04.14) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 21 நாட்கள் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் மண்டகப்படி நடத்தப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம், இன்று மாலை நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்னி சட்டி எடுத்தல் நடைபெறும். விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற அக்னி சட்டி எடுப்பார்கள். ஆயிரம்கண்பானை, உருண்டு கொடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்கள் நிறைவேற்றப்படும். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். கோடாங்கி வாசு பூக்குழி இறங்குகிறார்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் செய்து வருகிறார்.