பச்சை ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை!
ADDED :4231 days ago
தலைவாசல்: தலைவாசல் அருகே, புத்தூர் கிராமத்தில், ஆறு அடி உயரத்தில், பச்சை நிற ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தலைவாசல் அருகே, புத்தூர் கிராமத்தில், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு, பச்சை நிறத்தில், ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்தனர். நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்து, ஆறு அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், புத்தூர் பஞ்சாயத்து தலைவர் சங்கரய்யா, விழா குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.