திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயிலில் பங்குனி உத்திர விழா!
ADDED :4211 days ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. முதல்நாளில் சுருளி அருவியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தால் ஷண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாலாபிஷேகமும் மாலையில் மயில்வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாளில், பெரியாற்றில் இருந்து பால்குடம் எடுத்து நகர்வலம் நடந்தது. ஷண்முகநாதருக்கு பால்குடம் அபிஷேகமும் அன்னதானமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள்பெற்றனர். பங்குனி உத்திரவிழா சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உத்தமபாளையம், கோகிலாபுரம் பங்குனி உத்திர பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் தக்கார் சுரேஷ், செயல் அலுவலர் விஸ்வநாத் பங்கேற்றனர்.