உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானை தரிசிக்க... திருமலையில் நீண்ட கியூ!

ஏழுமலையானை தரிசிக்க... திருமலையில் நீண்ட கியூ!

திருப்பதி: கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில், திருமலைக்கு பக்தர்கள் வருவது அதிகரித்து உள்ளது. மேலும், புனிதவெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்தது. இதனால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், பக்தர்கள் வெள்ளிக்கிழமை 24 மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்கள், தரிசனத்திற்கு 12 மணி நேரமும் காத்திருந்தனர். நடைபாதை மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை மதியம், 2:00 மணிக்கே 15 ஆயிரத்தை கடந்த நிலையில், 300 ரூபாய் விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !