சோழவந்தான் பள்ளிவாசலில் மழைவேண்டி சிறப்பு தொழுகை!
ADDED :4279 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் மழைவேண்டி, உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லீம் ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜிஅபுபக்கர் தலைமை வகிக்க, துணைதலைவர் அப்துலங்பாகாப் முன்னிலை வகிக்க, செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். மழைவேண்டி, உலகநன்மைக்காக சிறப்பு தொழுகையை பள்ளி அஜ்ரத் நெகமத்துல்லா நடத்தினார். பின்னர் நடந்த "துவா வில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர். பொருளாளர் அலி நன்றி கூறினார்.