செஞ்சி சாயிபாபா கோயில் பிரதிஷ்டை விழா!
ADDED :4188 days ago
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மகாதேவிமங்கலம் கூட்டுரோடு காரியமங்கலத்தில் உள்ள கருணாசாயிபாபா முதலாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா திங்கள் முதல் புதன் வரை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோபூஜை மற்றும் மஹா கணபதி ஹோமம், 1008 கலசஸ்தாபனம் ஆகியவை நடைபெற்றது.செவ்வாய்க்கிழமை சாயிநாதருக்கு ஏகதின லஷ்சஜபஹோமம், புதன்கிழமை மஹாமிருத்தியுஞ்ஜயஹோமம், இதனைத் தொடர்ந்து கருணாசாய் மற்றும் சகல மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், மகாதீபாராதனை, ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.