மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: மே 1 கொடியேற்றம்!
ADDED :4295 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 1 காலை 10.36 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது. மே 8 இரவு 7.04 மணி முதல் 7.30 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 9ல் திக்குவிஜயம் நடக்கிறது. மே 10 காலை 10.30 மணிக்கு மேல் 10.54 மணிக்குள், வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 11 காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் ஜெயராமன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.