திருவாலங்காடு அம்மன் கோவிலில் திருட்டு!
ADDED :4181 days ago
திருவாலங்காடு: அம்மன் கோவிலில் வெள்ளி மற்றும் பணம் திருடப்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளாக்காட்டூர் கிராமத்தில், ஓம் சக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை, மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு உடைத்து, உள்ளே சென்று, இரண்டு வெள்ளி குத்து விளக்குகளையும், உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் திருடிச் சென்றனர்.இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.