வல்லபை ஐயப்பன் கோயில் சார்பில் சபரிமலையில் படிபூஜை!
ADDED :4183 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருக்கள் மோகன் கூறியதாவது: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை சார்பில் சபரிமலை தலைமை குருக்கள் தந்திரி மஹாஸ்ரீ கண்டரு ராஜூ வரரு தலைமையில் செப்., 19ல், சபரிமலையில் படிபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். 50க்கும் மேற்பட்ட பஸ்களில் பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஆடிப்பெருக்கு தினத்திலிருந்து விரதம் மேற்கொள்வர். மற்ற விபரங்களுக்கு 94437 24342 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.