உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் பார்வதீஸ்வர சுவாமிஸ்ரீ திருக்கல்யாணம்

காரைக்கால் பார்வதீஸ்வர சுவாமிஸ்ரீ திருக்கல்யாணம்

காரைக்கால் : காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயில் அமைந்துள்ளது. இது கி.பி. 6-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பார்வதீஸ்வரர். இந்தக் கோயிலில் உலக அமைதி வேண்டியும், மழை பெய்து பயிர் வளம் வேண்டியும் ஸ்ரீ ருத்ர ஹோமம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதன் நிறைவாக சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.  தொடர்ந்து,  மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !