வீட்டில் தண்ணீர் கஷ்டமா?
ADDED :4579 days ago
அட்சய திரிதியை அன்று, வீட்டில் லட்சுமி பூஜை பின், குபேரனை வழிபட வேண்டும். குபேர வழிபாட்டுக்குரிய கிழமை வெள்ளி. அவர் அவதரித்த வியாழக்கிழமையும், பூசநட்சத்திரமும் கூடிய நாளில் வழிபடுவதும் நன்மை தரும். அஷ்டமி, நவமி திதி இல்லாத நாளாக இருப்பது நல்லது. நாள் முழுவதும் அமிர்த, சித்தயோகம் அமைய வேண்டும். லட்சுமி குபேரரை வழிபடும் வீட்டில் கடனோ, பழைய பொருட்களை வாங்க வேண்டிய நிலையோ வராது. பணப்பற்றாக்குறை நீங்கி விடும். வீட்டில் இருக்கும் தண்ணீர் கஷ்டம் விலகும். சத்துள்ள சுவையான உணவு கிடைக்கும். சமூகத்தில் கவுரமான வாழ்வு ஏற்படும். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.