சிவகாசியில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :4182 days ago
சிவகாசி: சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, விஸ்வநாதசுவாமி- விசாலாட்சி அம்மன் கோயிலில், மழை வேண்டி, நேற்று, வருண ஜெபம் சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி, அங்கு, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதில், நந்தி பகவான் மூழ்கும் நிலையில் வைக்கப்பட்டார். அடிகளார் மழை பதிக பாடல்களை பாடினர். சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரசு உத்தரவுப்படி, இந்த ஜெபம் நடத்தப்பட்டதாக, கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.