புதுகை ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா
ADDED :4229 days ago
பொன்னமராவதி : புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்துவந்து அம்மனை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து அக்னி குண்டம் இறங்கும் விழாவில் கோயிலின் முன் வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளாகப் பங்கேற்றனர்.