தம்மம்பட்டி சிவன் கோயிலில் மழை வேண்டி யாகம்
ADDED :4149 days ago
தம்மம்பட்டி ; : சேலம் மாவட்டம், தம்மம்பட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை காசி விசாலாட்சி திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நேற்று இரவு நடைபெற்றது. அப்போது நந்தீஸ்வரர் சிலை நீரில் மூழ்க வைக்கப்பட்டு, வருண பகவானுக்கு சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்வர்கள் கலந்து கொண்டனர்.