நாகை மாரியம்மன் கோயிலில் மஞ்சள்நீர் உற்சவம்
ADDED :4150 days ago
பொறையாறு : நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 30-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மஞ்சள்நீர் உற்சவம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. காலைமுதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்துக்கொண்டும், காது குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.