ஆலங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்!
ADDED :4172 days ago
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை மேலப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விழாவினையொட்டி கடந்த, 27ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதø ன நடத்தப்பட்டு, ஸ்வாமி பல்லக்கில் வீதி உலா எடுத்து செல்லப்பட்டது. ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு காவடி, பால்குடம் மற்றும் தொட்டில் எடுக்கப்பட்டது. 10ம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தினையொட்டி அறுசுவை அன்னதானம் இளைஞர்களால் நடத்தப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.