குன்னூர் தந்தி மாரியம்மன் திருவீதி உலா!
ADDED :4172 days ago
குன்னூர் : குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா நடந்தது. குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில், நேற்று கொட்டும் மழையில் அம்மன் ஊர்வலம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடந்தது. மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.