ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது
ADDED :4171 days ago
தாராபுரம்: தாராபுரம் காடு ஹனுமந்தராய கோவில் வரும் 13-ஆம் தேதி தேர்த்திருவிழாவை நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்று காலை 7 மணிக்கு அனுமந்த வாகனம், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம் அதன்பின் நாளை காலை 7மணிக்கு கருடவாகனம், இரவு 7மணிக்கு சூரியபிரபா வாகனம் 10ம் தேதி காலை 7 மணிக்கு மண்டப வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். இரவு 7 மணிக்கு பல்லக்கில் சுவாமி அருள்பாலிக்கிறார். பின்னர் திருத்தேரில் எழுந்தருளுள் நிகழ்ச்சியும் நடக்கிறது.