உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் யானைகளின் தந்தங்களை அழகாக்கும் பணி துவக்கம்!

குருவாயூர் கோவில் யானைகளின் தந்தங்களை அழகாக்கும் பணி துவக்கம்!

பாலக்காடு: குருவாயூர் கோவில் யானைகளின் தந்தங்களை அழகுபடுத்த, வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். கேரளா, திருச்சூரில் உள்ளது, புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இக்கோவில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 53 யானைகளின் தந்தங்களை செதுக்கி, நீளத்தை குறைத்து அழகுபடுத்த, வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், 3 யானைகளின் தந்தங்களை செதுக்கி, அழகுபடுத்தப்பட்டது.

யானைகளின் தந்தங்களை செதுக்கி அழகுபடுத்தும் நிபுணர், பெரும்பிலாசேரி சசி கூறியதாவது: உளி மற்றும் சுத்தியின் உதவியால், யானைகளின் தந்தங்களை செதுக்கி அழகுபடுத்துகிறோம். தற்போது, மூன்று யானைகளின் தந்தங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. திருச்சூர் பூரம் திருவிழா நடைபெற உள்ளதால், மீதமுள்ள யானைகளின் தந்தங்களை அழகுபடுத்தும் பணி, பிறகு துவங்கும். தொடர்ந்து, அனைத்து யானைகளும் அழகுபடுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !