உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சூரில் இன்று பூரம் திருவிழா கோலாகலம்!

திருச்சூரில் இன்று பூரம் திருவிழா கோலாகலம்!

பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூரில், புகழ்பெற்ற பூரம் திருவிழா, இன்று நடைபெறுகிறது. பூரம் திருவிழாவின் முன்னோடியாக, பாரமேற்காவு, திருவம்பாடி ஆகிய கோவில்களில், 3ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து, இக்கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இக்கோவில்களில், நேற்று முன்தினம் முதல், யானைகளின் அணிகலன்கள், பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. திருச்சூர் பூரம் திருவிழா, இன்று (9ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, யானைகளின் அணிவகுப்பு குடைமாற்றம் நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாணவேடிக்கையும் நடக்கிறது. திருச்சூர் மாவட்டத்தில், பெய்து வரும் கனமழை, விழா கொண்டாட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை, உற்சவ கமிட்டியினருக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !