உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை திருவெற்றியூரில் திருக்கல்யாணம்!

திருவாடானை திருவெற்றியூரில் திருக்கல்யாணம்!

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா, மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நடந்தது. வல்மீகநாதசுவாமி, பாகம்பிரியாள் தாயார் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !