ஏழுமலையான் கல்யாணத்தில் முதலில் சாப்பிட்டவர்!
நரசிம்மருக்கு பெரிய பெரிய பெருமாள் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அயோத்தி ராமரும், திருப்பதி சீனிவாசப்பெருமாளும் ஆந்திராவிலுள்ள அகோபிலம் என்னும் திருத்தலம் வந்து, நரசிம்மரை வழிபாடு செய்ததால் இப்பெயர் உண்டானது. சீதையைப் பிரிந்த ராமர், மனசஞ்சலத்தால் அலைந்து திரிந்தார். அகோபிலம் நரசிம்மரைபஞ்சாமிர்த ஸ்தோத்திரம் பாடி வழிபட்டு மனவலிமை பெற்றார். ராவணனை வென்று சீதையை மீட்டார். திருமலையில் சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் விமரிசையாக திருமணம் நடந்தது. கல்யாண சாப்பாடு மலை போல குவிந்து கிடந்தது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள், மகரிஷிகள் என எல்லோரும் விருந்துண்ண காத்திருந்தனர். அப்போது சீனிவாசர் பிரம்மாவிடம், விருந்தை முதலில் அகோபிலம் நரசிம்மருக்கு படைத்து பூஜை செய்யும்படி ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு படையல் இட்ட பிறகே மற்றவர்கள் விருந்து சாப்பிட்டனர்.