மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :4163 days ago
செஞ்சி: நங்கியானந்தல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா நங்கியானந்தல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டி துவங்கியது. முதல் நாள் ஊரணி பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தினமும் பகல், இரவு இரண்டு வேளையும் பூங்கரகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 13ம் தேதி 8வது நாள் திருவிழாவாக பகல் 12 மணிக்கு கூழ் வார்த்தலும், மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முத்து மாரியம்மன், விநாயகர், முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தனர். ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அன்னம்மாள், முன்னாள் தலைவர் சுகுணா குணசேகரன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ., எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.