பால முருகன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :4163 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் வளாகத்தில் சிவனுக்கு நேற்று முன் தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று பவுர்ணமி பூஜையை முன்னிட்டு பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் கோவில் வாளகத்தில் உள்ள பாலவிநாயகர் சுவாமிக்கும், சிவன் சுவாமிக்கும், சீனிவாச பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு பூஜை வழிப்பாடு நடந்தது. பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடும் அன்னதானம் செய்து வருகின்றனர்.