வேடந்தவாடியில் கூத்தாண்டவர் கோவில் விழா!
ADDED :4213 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வேடந்தவாடியில் கூத்தாண்டவர் திருவிழா நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருகே வேடந்தவாடியில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்க காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இக்கிராமத்திற்கு வந்தனர். இதில், நேற்று முன்தினம் இரவு திருநங்கைகளின் பேஷன்ஷோ, நடன கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஆர்வமுடன் திருநங்கைகள் பங்கேற்றனர். நேற்று நடந்த தேரோட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், கூத்தாண்டவரை வழிபட்டனர்.