உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி தேவாலயத்தில் பெருவிழா திருத்தேர் பவனி

விக்கிரவாண்டி தேவாலயத்தில் பெருவிழா திருத்தேர் பவனி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் 141ம் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி மாலை திண்டிவனம் புனித அன்னாள் உள் விடுதி காப்பாளர் யூஜின் அருண்குமார் கொடியேற்றி வைத்து, திருப்பலி ஆசி வழங்கினார். கடந்த 22 ம்தேதி புதுச்சேரி- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில், புதிய ஆலய தேருக்கு நற்கருணை உறுதிபூசுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை தேர் அர்ச்சிப்பு மற்றும் ஆடம்பர தேர் பவனியை, விக்கிரவாண்டி பங்கு தந்தை நாயகம் துவக்கி வைத்தார். இரவு 10 மணிக்கு சாம்ஸ் இயக்குனர் ஆல்பர்ட் பெலிக்ஸ் நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.பங்கு தந்தைகள் மகிமை தாஸ் ஒளி, தெய்வநாயகம், சார்லஸ் அமல் குழந்தைராஜ், பெரியநாயகம், தோமினிக் சாவியோ , ஜோசப் டைட்டஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !