மே 27ல் புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா கோலாகலம்
மோகனூர்: புதுத்தெரு புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா, மே, 27ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் புதுத்தெருவில், ஆர்.சி., பேட்டப்பாளையம் பங்குக்கு உட்பட்ட, புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டு தோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, இன்று (மே, 25) காலை, 11.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் துவங்குகிறது. நாளை (மே, 26) மாலை, 6.30 மணிக்கு, நவநாள் ஜெபம், குணமளிக்கும் திருப்பலி, வேண்டுதல் தேர் பவனியும் நடக்கிறது. மே, 27ம் தேதி மாலை, 6.30 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு, திருவிழா திருப்பலி நடக்கிறது.அதை தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் புனிதர், பஸ் ஸ்டாண்ட், ப.வேலூர் சாலை, நாமக்கல் சாலை, கடைவீதி, காட்டுப்புத்தூர் சாலை உள்பட முக்கிய சாலைகள் விழாக பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்குகின்றனர். ஏற்பாடுகளை, பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.