உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கந்துாரி விழா ஏற்பாடுகள்: கூடுதல் கலெக்டர் ஆலோசனை!

காரைக்கால் கந்துாரி விழா ஏற்பாடுகள்: கூடுதல் கலெக்டர் ஆலோசனை!

காரைக்கால்: திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாகிப் தர்காவில் (பெரிய பள்ளிவாசல்) கந்துாரி விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. இவ்விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் காமராஜர் வளாகத்தில் நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் முகமது மன்சூர் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் மாணிக்கதீபன், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், பொதுப்பணி, நகராட்சி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறை அதிகாரிகள் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கந்துாரி விழாவின்போது, திருவிழா நடக்கும் தெருக்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கந்துாரி கூடு செல்லும் சாலையில் உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும். விழா ஊர்வலம் செல்லும் பாரதியார் சாலை, மஸ்தான் சாகிப் சாலை உள்ளிட்ட சாலைகளை புனரமைக்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !