உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பூஜை!

சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பூஜை!

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவில் குரு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 177வது குரு பூஜை விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. முதல் நாள் கலச பிரதிஷ்டை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு குரு பூஜை விழா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. 7.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10.00 மணிக்கு சுவாமிக்கு கலசாபிஷேகம், 10.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. குரு பூஜை விழாவையொட்டி அன்னதானம் நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !