திருவெண்ணெய்நல்லூர் மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :4148 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திருவெண்ணெய்நல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், வரும் 5ம் தேதி இரவு சக்தி கரக ஊர்வலமும், 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு செடல் திருவிழாவும் நடக்கிறது. அப்போது பக்தர்கள் உடலில் ஆளுயர வேல்கம்பிகளை குத்திக்கொண்டு, அரிகண்ட காவடி எடுப்பர். தொடர்ந்து 108 அலகு சாத்துதல், 20 அடி உயர ரத ஊர்வலம் நடக்கிறது. வரும் 7ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.