மதுரை கூடல் அழகர் கோயிலில் வைகாசி பிரமோற்ஸவ விழா தொடக்கம்!
ADDED :4145 days ago
மதுரை: மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று புதன் கிழமை வைகாசி பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு அன்னவாகனத்தில் பெருமாள் திருவீதிஉலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 7ம்தேதி சனிக்கிழமை கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். 9ம் நாளான வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் (ஜூன் 12ம் தேதி) பெருமாளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.