உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா!

நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நடந்தது. நெல்லிக்குப்பம் சாலி வாகன வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வந்தது. அதன் நிறைவு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி கணபதி ஹோமம், கோ பூஜை, 108 மூலிகைகளால் சன்னதி ஹோமம், 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் மற்றும்  பூர்ணாஹூதியை தொடர்ந்து அம்மனுக்கு சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !