கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4163 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கங்கையம்மன், சப்தமாதா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷன் தெருவில் அமைந்துள்ள கங்கையம்மன் சப்த மாதா கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4ம் தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்து நேற்று முன் தினம் காலை 7.20 மணிக்கு கலச புறப்பாடு நடந்து காலை 7.45 மணிக்கு கலசத்திற்கு விக்கிரவாண்டி ரவிச்சந்திர குருக்கள் தலைமையில் வேதாத்திரி குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரங்கா ரெட்டியார், கிருஷ்ணமூர்த்தி , சுப்புராயலு, குமார சாமி, ஜெயச்சந்திரன், ஆனந்தன், முரளிதரன், சுகுமார், செல்வகுமார், ஸ்பதி சுப்பிரமணியன், கிராம முக்கியஸ்தர்கள் செய்தனர்.