பு.கொணலவாடி கோயில்களில் நாளை மகா கும்பாபிஷேகம்
ADDED :4144 days ago
உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், கெங்கையம்மன் கோவில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 3 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, திக் பலி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், கும்ப பூஜை, யாகவேள்வி, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. நாளை(8ம் தேதி) காலை 5 மணிக்கு கோ பூஜை, பூர்வாங்க பூஜை, தத்துவ அர்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை, காலை 7.30 மணிக்கு விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7.45 மணிக்கு கெங்கையம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்றிரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.