உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபுரத்தில் கோவில் கும்பாபிஷேகம்

வீரபுரத்தில் கோவில் கும்பாபிஷேகம்

துறையூர்: செங்காட்டுப்பட்டி வீரபுரத்தில், புதிதாக கட்டப்பட்ட செல்வமாரியம்மன், செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. துறையூர் பட்டாபிராமன் ஐயர் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். முன்னதாக யாக சாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின், மூலஸ்தானத்தில், மஹா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், மத்திய சுங்க இலாக்கா ஓய்வு அதிகாரி மகாலிங்கம், யூனியன் கவுன்சிலர் செல்வராணி அசோகன், கிராம நிர்வாகஸ்தர் ஏகாம்பரம், தலைவர் சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !