தஞ்சாவூர் பெரிய கோவிலில் பூச்சொரிதல் விழா!
ADDED :4142 days ago
தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இது போல் இவ்வாண்டும் அதே போல் பூச்சொரிதல் வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் 32 வகையான பூத்தட்டுகளை ஏந்தி மேளம் முழங்க கோயிலைச்சுற்றி <ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து வேத மந்திரம் ஒலிக்க பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மழை வேண்டியும், மக்கள் ஒற்றுமைக்காகவும் விழா நடத்தப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.