பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
ADDED :4178 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில், சுவாமி சிம்ம வாகனத்தில் அருள் பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. மறுநாள் காலை துவஜாரோகணமும், மாலை அம்ஸ வாகனத்தில் சுவாமி கோவில் வீதியுலாவும் நடந்தது. கடந்த 6ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் சுவாமி, வீதியுலாவும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் வாசு பட்டாச்சார்யார் செய்திருந்தார்.