முருக்கேரி ஆடவல்லீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி குரு பெயர்ச்சி
ADDED :4136 days ago
முருக்கேரி: முருக்கேரி அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவிலில் வரும் 13ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. வரும் 13ம் தேதி மாலை 6.04 மணிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது.இதையொட்டி அன்று மாலை 4.35 மணிக்கு மகா கணபதி ஹோமம், குருபகவானுக்கு அபிஷேக ஆராதனை செய்கின்றனர். மாலை 6 மணிக்கு மேல் மகா பூர்ணாஹூதி, பரிகார சிறப்பு யாகம் நடக்கிறது.