பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி யாகம்
ADDED :4157 days ago
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு வரும், 13ம்தேதி குருபெயர்ச்சி விழா நடக்கவுள்ளது. இக் கோவிலில், காலை, எட்டு மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் துவங்கி, 10 மணிக்கு நிறைவடைகிறது. 11.15 மணியளவில் பிரம்மாவுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை, நான்கு மணியளவில் பரிகார அர்ச்சனை துவங்குகிறது. மாலை, ஆறு மணியளவில் மகாதீபாராதனையுடன் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. பரிகாரம் செய்து கொள்ள விரும்பும் ராசியினர், உரிய கட்டணத்தை கோவில் அலுவலகத்தில் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.