உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி வைபவம்!

கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி வைபவம்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி வைபவம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கங்கையம்மன், சக்தி விநாயகர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அய்யப்பன், ஏமப்பேர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வர், முடியனூர் அருணாசலேஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதி ஈஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், சின்னசேலம் கங்காதிஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரிஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது.தட்சணாமூர்த்திக்கும் நவகிரகங்களில் உள்ள குருவிற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !