ஏழைக்கே முக்கியத்துவம்!
ADDED :4129 days ago
பலர் தாம்ஏழையாகஇருக்கிறோமே, பங்களா, கார் என ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டுஇருக்கிறார்கள். அதோடு அவர்கள் செல்வந்தர்களை நினைத்து ஏக்கமும் கொள்கிறார்கள். இப்படி தன்னைத் தானே தாழ்வாக எண்ணுவது தேவையற்றது. இறைவனின்சன்னிதானத்தில் ஏழைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறதுஎன்கிறது இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி சொல்லும்போது,
வறுமை என்பது இறைவன் தரும் பரிசு. தன் மீது விசுவாசம் கொண்டவனுக்கு இறைவன்வறுமையையே அன்பளிப்பாகதருகிறான். வறுமை இழிவான ஒன்றல்ல. அது பெருமைதரக்கூடிய விஷயம்.ஒருவனின் மறைவுக்குப் பிறகு அவன் இறைவன் முன்னிலையில் வறுமைக் கோலத்தில் நின்றால்அதை அலங்காரமாக பார்த்துரசிக்கிறான் இறைவன்,என்கிறார்கள்.