உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் கோயிலை அடைந்தார் பெருமாள்!

எமனேஸ்வரம் கோயிலை அடைந்தார் பெருமாள்!

பரமக்குடி : எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பவுர்ணமி வசந்தோத்சவ திருவிழா, ஜூன் 12ல் துவங்கியது. அன்றிரவு 2 மணிக்கு மேல் பெருமாள் ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கில், வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று காலை 9 மணிக்கு கோயிலுக்குள் எழுந்தருளினார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று பகல் 9 மணிக்கு உற்சவ சாந்தியும், நாளை இரவு கருடவாகனத்தில் பெருமாள் வீதியுலாவுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !