உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தவனம் அதிஷ்டானத்தில் அவதூத சுவாமிக்கு மகா அபிஷேகம்!

நந்தவனம் அதிஷ்டானத்தில் அவதூத சுவாமிக்கு மகா அபிஷேகம்!

சிதம்பரம்: நந்தவனம் அதிஷ்டானம் அவதூத சுவாமி குருபூஜையையொட்டி மகா அபிஷேகம், ஆராதனை சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. சி தம்பரம் குருவைய்யர் தெரு நந்தவனத்தில் அவதூத சுவாமிகள் துறவறம் நிலையில் சமாதி அடைந்த சதயம் நட்சத்திரமான குரு பூஜை விழா  அவதூத சுவாமி அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், சிறப்பு ஆராதனை பூஜைகளுடன் நடந்தது. இதனையொட்டி இன்று காலை அவதூத சுவாமிகள்  அதிஷ்டானத்தில் குரு பிராத்தனையுடன் துவங்கி, மகா கணபதி ஹோமம், ஆவகந்தி, ருத்ரம், சமக (வசுவத்தாரை), தன்வந்திரி உள்ளிட்ட பல்வேறு  ஹோமங்கள் நடந்தது. இதனைதொடர்ந்து அவதூத சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பின்னர் மகா தீபாராதனைகள், லோக ஷேமாத்ர பிராத்தனைகள் நடந்தது. இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை டிரஸ்டிகள் வக்கீல் ராமச்ச ந்திரன், சங்கரநடராஜ தீட்சிதர், திருவனந்தபுரம் சசிதரன் நாயர், ஹரிஹரநாகநாதன், சுந்தர், வக்கீல் நடராஜன், ஆடிட்டர் நடராஜபிரபு ஆகியோர்  செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !