உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் ரூ. 25 லட்சம் செலவில் ராஜகோபுரம்!

பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் ரூ. 25 லட்சம் செலவில் ராஜகோபுரம்!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வேங்கட வரதராஜப் பெருமாள் கோவில் மகா  கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. மஹா பாக்யபுரி, தட்சண அஹோபிலம் என்று போற்றப்படும், பெரும்பாக்கம் பெருந்தேவி தாயார்  சமேத வேங்கட வரதராஜப் பெருமாள் கோவிலில் வைகாசன ஆகமப்படி வழிபாடுகள் நடக்கின்றன. இங்கு பெருமாள், தாயார், ஆண்டாள், லட்சுமி  நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கருடன், அனுமன் சன்னதிகள் உள்ளன. இக்கோவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்றுநிலை ராஜகோபுரம் புதிதாக  அமைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி வரும் ஜூலை 7ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.  ஏற்பாடுகளை நிர்வாக தர்மகர்த்தா முரளி, தர்மகர்த்தாக்கள் கண்ணன், விஜயராகவன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் பிரகாஷ், ஆய்வாளர் கவியரசு, அர்ச்சகர் ஸ்ரீதரன் பட்டாச்சாரியர் மற்றும் ரங்கநாதன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !