உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா முகூர்த்தக்கால்!

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா முகூர்த்தக்கால்!

பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவையொட்டி, நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு அடுத்தபடியாக, பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா பிரசித்தி பெற்றுள்ளது. ஜூலை 1ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ஜூலை 7ல் கொடியேற்றத்துடன், 10 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. நேற்றைய விழாவில், செயல் அலுவலர் சுதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !