உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹஜ் யாத்ரீகர்களுக்கு புத்துணர்வு பயிற்சி

ஹஜ் யாத்ரீகர்களுக்கு புத்துணர்வு பயிற்சி

திருப்பூர் : தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி, திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் சேவை மையம் சார்பில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம், திருப்பூர் காதர் சலீமா மண்டபத்தில் நடந்தது. மொத்தம் 40 நாட்கள் செல்லும் புனித பயணத்துக்கு முன்னதாக, ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் யாத்திரை குறித்து இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களிலும், அடுத்ததாக, சென்னையிலும் பயிற்சி அளிக்கப்படும். பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட மருத் துவ பரிசோதனையும் மேற்கொள் ளப்படும். வரும் ஆண்டில், தமிழகத்தில் இருந்து 2,671 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் நடந் தது. பயிற்சியாளர் காஷீம், சேவை மைய மாவட்ட தலைவர் முகமது இஸாக், செயலாளர் சையது ஆதீல் உள்ளிட்டோர் புனித யாத்திரை குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !