சித்தி வினாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :4178 days ago
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டிபுதுார் சித்தி வினாயகர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன், 10ம் ஆண்டு விழா துவங்கியது. தொடர்ந்து வினாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.